கல்லூரி ஒன்றில் தன்னுடைய பேச்சை தொடங்கும் முன்பு மாணவர்கள் மத்தியில், ‘நான் ஆங்கிலத்தில் பேச வேண்டுமா இந்தியில் பேச வேண்டுமா, தமிழில் பேச வேண்டுமா?’ எனக் கேட்டுவிட்டு, ‘இந்தி நம்முடைய தேசிய மொழி அல்ல, அலுவல் மொழிதான்.’ எனக் கூறிவிட்டு தன்னுடைய பேச்சை தமிழிலேயே தொடர்ந்தார்.
‘பொறியியல் படிக்கும்போது லேப் சம்பந்தமான விஷயங்களை நிறைவு செய்வதற்குள் படாத பாடுபட்டேன். ‘நீயெல்லாம் பெயில்தாண்டா ஆவே..’ என பேராசிரியர்கள் சொல்வார்கள். ஆனால், என்னுடைய வகுப்பில் நான்காண்டுகளில் அரியரே இல்லாமல் தேர்வான மாணவன் நான் மட்டும்தான். கடினமான காலங்களை பொறியியல் படிக்கும்போது எதிர்கொண்டதால்தான் என்னால் சிறந்த கிரிக்கெட்டராக உருவெடுக்க முடிந்தது. பொறியியல் படிப்புதான் எனக்கு நேரம் தவறாமையை கற்றுக்கொடுத்தது.