முகமாற்று அறுவை சிகிச்சை என்பது மெடிக்கல் மிராக்கிள்தான். அதிலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முகத்தின் உணர்வுகளையும் மீட்டு எடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.
அமெரிக்காவின் மிக்சிகன் ( Michigan) நகரைச் சேர்ந்த டெரெக் பிஃபாஃப் (Derek Pfaff) என்ற 30 வயது நபர், 10 வருடங்களுக்கு முன்னாள் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அவருடைய முகம் சிதைந்துவிட்டது. அதற்கான அறுவை சிகிச்சைகள் செய்தபோதும் அவரால் திட உணவுகளை உண்ணவோ, மற்றவர்களிடம் பேசவோ முடியவில்லை. மூக்கு இல்லாத காரணத்தினால் கண்களில் கண்ணாடியைக் கூட அவரால் அணிய முடியவில்லை. டெரெக்குக்கு கடந்த 10 ஆண்டுகளில் 58 மறுசீரமைப்பு முக அறுவை சிகிச்சை செய்தும், அவரால் கண் சிமிட்ட, புன்னகைக்கக்கூட முடியவில்லை.