Ajith Kumar Racing
துபாயில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்கவிருந்த நடிகர் அஜித் குமார், கார் ஓட்டுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் குமார் கார் ரேசிங் அணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக அஜித் குமார் ரேசிங் அணியின் முக்கிய கமிட்டி சமீபத்தில், 24H துபாய் பந்தயத்துக்கு தயாராகி வந்த அஜித் குமாருக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கங்களை ஆராய்ந்து வந்தது.
இந்த 24H போட்டி அதிக திறனைக் கோருகிறது, அணியினர் இந்த சீசனில் வரவிருக்கும் சவால்களை சந்திப்பது குறித்து ஆலோசித்தோம். அணியின் உரிமையாளர் மற்றும் மைய பகுதியான அஜித் குமாரின் உடல்நலமும் மற்றும் அணியின் ஒட்டுமொத்த வெற்றியும் முன்னுரிமைகளாக இருக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.