ஹிண்டன்பர்க்கின் இந்த ஆய்வறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை உடைந்து ஏராளமான முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இரண்டே நாள்களில் 20 முதல் 30 சதவிகிதம் வரை சரிந்தது. இது இந்திய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக வெடித்தது.
அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்தது என்பதே ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மற்றொரு புகாராக இருந்தது.

இந்த விவகாரத்தில் அதானி, அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியதாக அமெரிக்க அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதானி மீது ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டைச் சுமத்தி இருந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்க அதிகாரிகள், அதானியை விசாரிக்க வேண்டுமென்றால் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம். இதற்காக அமெரிக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.