இந்த நிலையில், தன்னுடைய கரியர் முழுக்க தான் செய்ததை அபிஷேக் சர்மா இரண்டே மணிநேரத்தில் செய்துவிட்டதாக இங்கிலாந்தின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் அலெஸ்டர் குக் பாராட்டியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த வீரர்களின் எலைட் லிஸ்டில் 12,472 ரன்களுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் அலெஸ்டர் குக், ஒயிட் பால் கிரிக்கெட்டில் (92 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள்) மொத்தமாகவே 10 சிக்ஸர் மட்டுமே அடித்திருக்கிறார்.
இப்படியிருக்க, அபிஷேக் சர்மாவின் நேற்றைய இன்னிங்ஸைப் பாராட்டிய அலெஸ்டர் குக், “என்னுடைய கரியர் முழுக்க நான் அடித்த சிக்ஸர்களைவிட அதிக சிக்ஸர்களை இரண்டே மணிநேரத்தில் அபிஷேக் சர்மா அடித்திருக்கிறார்.” என்று புகழ்ந்திருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை, 17 டி20 போட்டிகளில் போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கும் அபிஷேக் சர்மா 2 சதங்கள், 41 சிக்ஸர் உட்பட 535 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.