இந்த நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் 15 பேர் பட்டியலில் தேர்வாகி பென்ச்சில் மட்டுமே அமரவைக்கப்பட்டு தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான தொடரில் 15 பேர் பட்டியலில்கூட தேர்வாகாமல் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன், இந்திய அணியில் ஆட தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருந்தியிருக்கிறார்.
தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகமான Revsportz-வுடனான நேர்காணலில் தனக்கு நேரும் புறக்கணிப்புகள் குறித்து பேசிய அபிமன்யு ஈஸ்வரன், “ஆம், சில சமயங்களில் அது கஷ்டமாகத்தான் இருக்கிறது.
நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறீர்கள், கடினமாக பயிற்சி செய்கிறீர்கள், ஆனால் உங்கள் கனவு பாதியிலேயே நிற்கிறது.

இருப்பினும், என் குடும்பம், நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
ரஞ்சி சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த விஷயங்களில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்.