Doctor Vikatan: சருமத்துக்கும் கூந்தலுக்கும் தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது சரியா? | Doctor Vikatan – Is it ok to use aloe vera gel daily for skin and hair?

Share

Doctor Vikatan: தினமும் கூந்தலுக்கும் சருமத்துக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாமா? ரெடிமேடு ஜெல் பயன்படுத்தலாமா அல்லது கற்றாழைச் செடியிலிருந்து பறித்துதான் பயன் படுத்த வேண்டுமா? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கீதா அஷோக்

கீதா அஷோக்

தினமும் சருமத்துக்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். ஆனால், அத்துடன் சில துளிகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்த வேண்டும். கற்றாழை ஜெல் நச்சுத்தன்மை மிக்கது. அதனால் அதை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட இரண்டு சொட்டுகள் ஆல்மண்டு ஆயில் கலந்து பயன்படுத்துவதே சரியானது.

எல்லோருக்கும் ஃப்ரெஷ்ஷான கற்றாழை ஜெல் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்கள் ரெடிமெடு ஜெல் பயன்படுத்தலாம். ஆனால், ரெடிமேடு ஜெல்லில் ப்ரிசர்வேட்டிவ் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகே பயன்படுத்த வேண்டும். ப்ரிசர்வேட்டிவ் கலந்திருக்கும் பட்சத்தில் சிலருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com