Dhoni: `வாழ்நாள் முழுமைக்குமான நட்பு’ – தோனி குறித்து நெகிழும் விராட் கோலி!|T20 WorldCup – Kohli Shares his bonding with Dhoni

Share

நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வென்றிருந்தது. இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவும் கோலியும் கூட்டணியாக அதகளப்படுத்தியிருந்தனர். சமீபகாலமாக மிகச்சிறப்பாக ஆடிவரும் இந்த கூட்டணிக்கு Sur-Vir என பெயரும் வைத்திருக்கின்றனர்.

ஐசிசி ரிவ்யூ என்ற சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கோலி தோனி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து அவர் கூறுகையில்,

“தோனியுடனான எனது நட்பு பற்றி விளக்குவது ரொம்பவே கடினம். ஏனெனில் அது புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. உண்மையில், நாங்கள் ஒன்றாக பேட்டிங் ஆடும்போது, அவர் எப்போதும் ரன்களுக்காக அழைத்ததே இல்லை. பந்து எங்காவது இடைவெளியில் சென்றவுடன் அவர் இரண்டுக்காக ஓடுகிறார் என்று எனக்குத் தெரியும், நானும் இரண்டு ரன்கள் ஓடி விடுவேன். எங்களுடைய இந்த 10-12 வருட நட்பில் அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். ஆயினும் அணிக்கு என்ன வேண்டும், அணிக்காக நாம் என்ன செய்ய வேண்டும், என்பதில் நாங்கள் மிகவும் கவனம் செலுத்தினோம். ஒருவருக்கொருவர் இருவருடைய மனநிலையையும் நாங்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளோம். என்னுடைய ஆரம்ப நாட்களில் அவர் அளித்த ஆதரவு என்னுடைய் வளர்ச்சிக்கு முக்கியமானது. அவரது கரியரில் நானும் அவருக்காக எப்போதும் நின்றிருக்கிறேன். இது என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றப் போகிற ஒன்று.” என்று கூறினார் விராட் கோலி. Dho-Vir கூட்டணி!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com