‘மொட்டை அடித்தால் ரூ.15,000’ – சேலத்தில் பெண்களிடம் நூதன மோசடி நடந்தது எப்படி?

Share

மோசடியில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்
படக்குறிப்பு, மோசடியில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

“புதிய வகை தொற்றுநோய் பரவி வருகிறது. தலைமுடி வழியாக நோய் பரவுவதால் மொட்டை அடித்தால் தமிழக அரசு ரூ.15,000 வழங்கும்” என்று கூறி வந்த ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று பெண்கள் மொட்டையடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஆத்தூர் அருகேயுள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார். தன்னை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திய அவர், “கொரோனாவைப் போன்ற புதிய நோய் பரவி வருகிறது. தலைமுடி வழியாக அது பரவுவதால் மொட்டை அடித்தால் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். தமிழக அரசு அதற்காக ஊக்கத்தொகை வழங்குகிறது” என்று கூறியுள்ளார்.

அந்த நபர் ஊக்கத்தொகையாக பெண்களுக்கு ரூ.15,000, ஆண்களுக்கு ரூ.6,000, மாணவிகளுக்கு ரூ. 45,000 வழங்கப்படும் என்றும் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

’18 டோக்கன் மட்டுமே’

மோசடியை நம்ப வைப்பதற்காக “உங்கள் கிராமத்திற்கு 18 டோக்கன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் அதிகாரிகள் பணத்துடன் வருவார்கள். அதற்குள் மொட்டை அடித்து தயாராக இருக்க வேண்டும்” என்று அந்த நபர் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஏற்கனவே மொட்டை அடித்த பெண்களின் புகைப்படங்கள், பணக்கட்டுகளின் படங்கள் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் மூலம் அந்த நபர் அனுப்பியுள்ளார்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com