மோகன்லால் தன்னிடம் ’10 தந்தங்கள், 13 சிலைகள்’ இருப்பதாக வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

Share

மோகன் லால், யானை தந்தங்கள், கேரள வனத்துறை

பட மூலாதாரம், X/Mohanlal

படக்குறிப்பு, மலையாள நடிகர் மோகன்லால் தன்வசம் உள்ள யானை தந்தங்கள் பற்றி வனத்துறையிடம் தகவல் அளித்துள்ளார்.

மலையாள நடிகர் மோகன் லால் தன்வசம் 10 யானை தந்தங்களும் மற்றும் 13 தந்தத்தாலான சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் தெரிவித்துள்ளர்.

காட்டுயிர் சம்மந்தப்பட்ட பொருட்களை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அறிவிப்பது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்ட அறிவிப்பின் கீழ் நடிகர் மோகன்லால் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக நடிகர் மோகன்லால் ஏற்கெனவே வழக்கைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தற்போது வனத்துறையிடம் சமர்பித்த புதிய விண்ணப்பத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தவை போக அவர் வசம் கூடுதலாக 6 யானை தந்தங்கள் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை கேரள வனத்துறையும் உறுதி செய்துள்ளது.

பின்னணி என்ன?

கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலுக்கு சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அந்தச் சோதனையின் ஒரு பகுதியாக அவர் வசம் யானை தந்தங்களும் மற்றும் தந்தத்தாலான சிலைகளும் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கேரள வனத்துறையினர் சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். எர்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com