‘இறப்புக்கு முதல்நாள் அடித்ததாக புகார்’: பட்டியல் சாதி இளைஞர் மரணத்தால் பதற்றம் – மயிலாடுதுறையில் என்ன நடந்தது?

Share

மயிலாடுதுறை, பட்டியல் சாதி இளைஞர் கொலை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, உயிரிழந்த பார்த்திபன்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.)

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞரும் மாற்று சாதியைச் சேர்ந்த சிறுமியும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

“முதல்நாள் என் மகனை அவர்கள் அடித்தபோதே காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தோம். நேற்று (ஜூன் 30) அதிகாலை 1.30 மணியளவில் காணாமல் போன என் மகனை சடலமாகப் பார்த்தேன். அந்தப் பெண்ணின் இறப்பிலும் மர்மம் உள்ளது,” என்கிறார், இளைஞரின் தந்தை மாரிமுத்து.

இந்தக் குற்றச்சாட்டை பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர். இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆன்மிக பணிகளில் ஆர்வம் கொண்டவராக அறியப்படும் இவருக்கு நிரந்தர வேலை என எதுவும் இல்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com