அமெரிக்கா – இரான் மோதலில் அரபு நாடுகளுக்கு பெரும் தோல்வியா? ஓர் அலசல்

Share

அரபு நாடுகளின் தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (இடமிருந்து வலமாக) ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், குவைத் அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் மற்றும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் மத்திய கிழக்கில் நிலவிவந்த ராணுவப் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளன, அதன் இறுதி முடிவு குறித்து ஊகிக்க முற்படுவது அவசரமானதாக இருக்கும்.

இருப்பினும், நம் முன்னே எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த ஒட்டுமொத்த மோதலில் அதிக நட்டப்படுவது யார்?

இந்த கேள்விக்கு ஒருமித்த பதில் இல்லை, பல்வேறு பதில்களும், வெவ்வேறு கருத்துக்களும் நிலவுகின்றன.

அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் மூலம் இரானுக்கு “மிக அதிகமான சலுகைகள்” கிடைக்கக்கூடும் என்றும், இதனால் இந்த பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் பாரசீக வளைகுடா அரபு நாடுகள் அஞ்சுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com