வாகனங்களில் பாம்புகள் தஞ்சம் புகுந்தால் பதற்றப்படாமல் என்ன செய்ய வேண்டும்?

Share

வாகனங்கள், இயந்திரங்களுக்கு உள்ளே பாம்புகள் புகுந்து விடுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த வாரம், ஹைதராபாத்தில் உள்ள ஓர் உணவு விடுதியில் இருந்த மீன் தொட்டிக்குள் சாரைப் பாம்பு இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் ஸ்நேக்ஸ் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களை உதவிக்கு அழைத்தனர்.

கோடை வெப்பத்துக்கு நடுவில் இளைப்பாறுவதற்குக் குளிர்ச்சியான இடம் தேடி கட்டடத்துக்குள் நுழைந்த பாம்பு, மீன் தொட்டிக்குள் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று இந்தப் பாம்பை மீட்டது குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த ஜனவரி மாதம் மும்பையில் உள்ள அந்தேரி மேற்கு பகுதியில் இருந்த ஒரு வீட்டின் தரைத்தளத்தில், சாரைப் பாம்பு ஒன்று மீட்கப்பட்டது. அங்கிருந்த வாஷிங் மிஷினுக்குள் தஞ்சம் புகுந்திருந்த அந்தப் பாம்பு, நகர்ப்புற காட்டுயிர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலரின் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் இது தொடர்பாக வெளியான செய்தி கூறுகிறது.

இப்படியாக, வீடுகளில் உள்ள மறைவான சந்து, பொந்துகளில், வாஷிங் மிஷின் போன்ற இயந்திரங்களுக்குள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குள், மீன் தொட்டியில், பயன்படுத்தப்படாமல் குவியல்களாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு அடியில் எனப் பல்வேறு இடங்களில் மக்கள் பாம்புகளைப் பார்க்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இப்படியான சூழ்நிலைகளில் அதைப் பார்க்கும் எவருக்குமே உடனடியாக அச்சம் தொற்றிக்கொள்ளும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com