8 ஆண்டுகளாக தொடரும் சோகம் – மறுபடியும் 190 இலக்கை சேஸ் செய்யத் தவறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

Share

8 ஆண்டுகளாக தொடரும் சோகம். மறுபடியும் 190 இலக்கை சேஸ் செய்யத் தவறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 27வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீழ்த்தியது.

ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் வீரர்கள் அபிஷேக் ஷர்மா, ஹெய்ன்ரிக் கிளாசன் இருவரும் தலா 59 ரன்கள் எடுத்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இந்த இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுதத்து. சூப்பர் கிங்ஸுக்கு மேத்யூ ஷார்ட் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் பௌலர்களில் அதிகபட்சமாக இஷான் மலிங்கா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com