டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்: கம்பீர் கூறியது என்ன?

Share

டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்: கம்பீர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அதன் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது பயிற்சி முறைகள் மற்றும் சமூக ஊடகங்களில் நடந்த விவாதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“அணி சிறப்பாக செயல்படாத போது, ​​சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. வீரர்களுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள், அவர்களைக் கையாளும் உங்கள் தனிப்பட்ட செயல்முறை மற்றும் நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தீர்கள் என்று விளக்க முடியுமா?” என்று கம்பீர் கேட்கப்பட்டார்.

அதற்குப் பதிலளித்த கம்பீர், “முதலில், நான் எந்த சமூக ஊடகங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய அவசியமில்லை. டிரஸ்ஸிங் அறையில் அமர்ந்திருக்கும் அந்த 30 பேருக்கும்தான் பொறுப்புக்கூற நான் கடமைப்பட்டவன்… இதைத் தவிர, எனக்கு இதற்கு முன்போ, இன்றோ நான் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை, எதிர்காலத்திலும் நான் இருக்க மாட்டேன்” என்றார்.

“நான் ஒரு பயிற்சியாளராக இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. எதிர்காலத்திலும், எனது பயிற்சி காலத்தில், அந்த 30 பேர்தான் மிக முக்கியமானவர்கள், வேறு யாரும் முக்கியமில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக உலக சாம்பியனாகியுள்ளது.

முன்னதாக, 2024 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com