`குதிரைவாலி களி, நாட்டுக்கோழி பெப்பர் கறி…’ – வேலூரில் கமகமத்த அவள் விகடன் சமையல் போட்டி | aval vikatan cooking super star season 3 competition was held successfully in vellore

Share

க்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார்.

மதுரை, திருச்சி, புதுச்சேரியைத் தொடர்ந்து… வேலூரில் இன்றைய தினம் இப்போட்டி நடைபெற்றது. வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியிலுள்ள சாந்தி மஹாலில் காலை 10 மணியளவில், குத்து விளக்கேற்றிப் போட்டியைத் தொடங்கிவைத்தார் நடுவர் தீனா. வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம் மற்றும் அருகேயுள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், வாலாஜாபேட்டை மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் 119 போட்டியாளர்கள் ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டனர். பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, விருப்பமான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை அவர்கள் காட்சிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.

விதிமுறைப்படி முதல் சுற்றுக்கு வீட்டிலிருந்தே வகை வகையாக சமைத்துக் கொண்டு வந்திருந்திருந்தனர். அரங்கம் கமகமக்க மில்லட் களி, மொச்சக்கொட்டை காரப்பொங்கல், சாமைப்பொங்கல், வரகு அரிசி உப்புமா, கருப்புக் கவனி அல்வா, வெண்ணைப் புட்டு, பன்னீர் சமோசா, சிறுதானியக் கொழுக்கட்டை, ராகி கேக், குதிரை வாலி அரிசி கேசரி, கருப்பு உளுந்து பொடி இட்லி, நாட்டு சர்க்கரை லட்டு, கேரளா கீ ரைஸ், பெப்பர் சிக்கன், பச்சைப் பயறு தோசை, புதினா துவையல், சிக்கன் ரோஸ்ட், நேந்திரம் வாழை வரட்டல், தவணைப் பொடி, உழுந்துச் சோறு, சிக்கன் கறி, காஞ்சிபுரம் இட்லி, வாழை இலை சட்னி, மஞ்சள் துவையல், இன்சுலின் இலை சட்னி, அவல் லட்டு, டிரைஃப்ரூட் லட்டு, கருப்பு உளுந்து லட்டு, தேங்காய் சிக்கன், மில்லட் தோசை, மில்லட் இடியாப்பம், நாட்டுக்கோழி பெப்பர் கறி, தவா ஃபிரை ரிவர் ஃபிஷ், ராகி சிக்கன் சவர்மா ரோல், ஹெல்தி பிரவுன் சாலட், கொள்ளு ரசம், முடவாட்டுக்கால் சூப், பூண்டுத் தொக்கு, வேர்க்கடலை சாலட், ராகி சிமிலி, உலர்ப் பழங்கள் மற்றும் நட்ஸ் லட்டு, மாங்காய் ஊறுகாய்,

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com