வங்கதேச தேர்தலை இந்தியா உற்றுநோக்குவது ஏன்? 4 முக்கிய காரணங்கள்

Share

இந்தியா - வங்கதேசம், வங்கதேச நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அண்டை நாட்டில் நடக்கும் ஒரு வழக்கமான பொதுத் தேர்தலை டெல்லி இவ்வளவு நீடித்த கவனத்துடன் பின்தொடர்வது அரிதானது.

வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை இந்தியா எதிர்பார்ப்பு மற்றும் கவலையின் அசாதாரண கலவையுடன் கவனித்து வருகிறது என்பது டெல்லியில் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அண்டை நாட்டில் நடக்கும் ஒரு வழக்கமான பொதுத் தேர்தலை டெல்லி இவ்வளவு நீடித்த கவனத்துடன் பின்தொடர்வது அரிதானது.

இதற்கான முதன்மையான காரணம் இந்தத் தேர்தல் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா எதிர்கொள்ள வேண்டியிராத விளைவுகளை உருவாக்கத் தயாராக உள்ளது.

முதலாவதாக, பல ஆண்டுகளில் முதல் முறையாக, அவாமி லீக் அதிகாரத்தில் இல்லாத ஒரு அரசாங்கத்தை வங்கதேசம் பெற உள்ளது. டாக்காவில் அவாமி லீக் அரசாங்கங்களைக் கையாண்டு பழகிய டெல்லி, இப்போது ஒரு புதிய அரசியல் யதார்த்தத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது.

இரண்டாவதாக, தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி (BNP), தனியாகவே ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியுமா — அல்லது ஜமாத்-இ-இஸ்லாமியை ஒரு கூட்டணிக் கட்சியாகச் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகுமா என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

2001 முதல் 2006 வரை, கலிதா ஜியாவின் கீழ் பிஎன்பி-ஜமாத் கூட்டணி வங்கதேசத்தை ஆண்டது; வங்கதேசத்தின் அரசியல் களம் அன்றிலிருந்து கணிசமாக மாறியிருந்தாலும், டெல்லி அந்தக் காலக்கட்டத்தை தனக்கு சௌகர்யமானதாக கருதவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com