எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு உதவிய 10 படங்கள்

Share

 எம்ஜிஆர், திரைப்படங்கள், அதிமுக, அரசியல்

பட மூலாதாரம், Youtube

”எம்ஜிஆருக்கு கதாநாயக பிம்பம் எப்படி உருவானது என்பதுதான் என்னுடைய மானுடவியல் ஆய்வு. 1950ஆம் ஆண்டில் கருணாநிதி வசனத்தில் ‘மந்திரிகுமாரி’ படத்தில் துவங்கி, ‘ராஜகுமாரி’, ‘தேவகி’ என பல படங்களில் தொடர்ந்து நடித்த போதுதான் திராவிட இயக்கம் சார்ந்த அவருடைய அரசியல் பயணம் துவங்கியது. அந்தப் படங்களில் கருணாநிதி எழுதிய வசனங்கள் திமுக கொள்கையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.”

”மலைக்கள்ளன் படத்தில் 1954 ஆம் ஆண்டில் நடித்த பின்புதான் எம்ஜிஆர் மீது முழுமையான திமுக அரசியல் முத்திரை விழுந்தது. ராஜா ராணி காலத்துப் படங்களில்தான் அவர் அதிகமாக அரசியல் வசனங்களைப் பேசினார். சமூகப்படங்களில் நடிக்கத் துவங்கிய பின்பு, உடை, கொடி, பெயர், சூரியன் போல கைகளைக் காண்பிப்பது, பாடல் வரிகள் போன்று குறியீடுகளை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தினார்.” என பிபிசி தமிழிடம் இப்படி கருத்துகளைப் பகிர்கிறார் டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன்.

இத்தகைய படங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் பாடல்களின் மூலமாக, எம்ஜிஆர் தனது நாயக பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டதாகவும், அதுவே அவருடைய அரசியல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததாகவும் விளக்குகிறது திராவிட இயக்க ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய ‘The Image Trap: M G Ramachandran in Film and Politics நுால். இது ‘பிம்பச்சிறை’ என்று தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நடித்த பல்வேறு படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்களை வைத்து, இதை விளக்குகிறது பிம்பச்சிறை.

எங்க வீட்டுப்பிள்ளை(1965), விவசாயி (1967) ஆகிய படங்களில், இரக்கமற்ற நிலப்பிரபுக்களை எம்ஜிஆர் திருத்தி நல்லவர்களாக மாற்றுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com