ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ஜெர்மனி, போலந்து தலைவர்கள் கூறுவது என்ன?

Share

பிரதமர் மோதி, ரஷ்யா, இந்தியா, மேற்கத்திய நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா குறைக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன

ஜனவரி 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மன் அதிபரும் பிரதமர் மோதியும் கலந்துகொண்டனர். அதேபோல, போலந்து வெளியுறவு அமைச்சரும் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதற்கான சில முக்கிய சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.

ஏப்ரல் 2022இல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ‘2+2’ பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டன் சென்றிருந்தனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் நடைபெற்ற அந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது ஒரு செய்தியாளர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்வதைப் பற்றிப் பேசும்போது, உங்கள் கவனம் ஐரோப்பாவின் மீது இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எங்களது எரிசக்தி பாதுகாப்புக்காக ரஷ்யாவிடம் இருந்து ஓரளவு எரிசக்தி பொருட்களை வாங்குகிறோம். ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, எங்களது ஒரு மாதம் முழுவதுமான மொத்த கொள்முதல்கள் ஐரோப்பா ஒரேயொரு நாளின் மதியத்தில் செய்யும் அளவைவிட அதிகமாக இருக்காது என்று நினைக்கிறேன். எனவே, நீங்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்றார்.

ஜெய்சங்கரின் இந்த வீடியோ இந்தியாவில் மிகவும் வைரலானது. இந்தியா முதன்முறையாக மேற்கத்திய நாடுகளுக்கு அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுக்கிறது என்று மக்கள் பாராட்டினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com