வா வாத்தியார்: “கார்த்திக்கு பருத்திவீரனைவிட கஷ்டமானப் படம் இது” – நடிகர் சத்யராஜ் | Come, Master: “This is a more difficult film for Karthi than Paruthiveeran” – Actor Sathyaraj

Share

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள “வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் நிதி பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் நாளைப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வாக இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஞானவேல் ராஜா, நடிகர் சத்யராஜ், நடிகை க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ்,“

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

கார்த்தி உனக்கு முதல் படம் பருத்திவீரன் ரொம்ப சேலஞ்சான படம். அதைவிட உனக்கு ரொம்ப கஷ்டமான படம் வா வாத்தியார்தான். தலைவர் பெயரில் வரும் படத்தில் நடித்து பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம். ஆனால், நீ இதில் பிரமாதமாக நடித்திருக்கிறாய். இந்தப் படம் பெரும் வெற்றி பெறும். நலன் இந்தப் படத்தை, இப்போது இருக்கும் தலைமுறைக்கும் பிடித்ததுபோல எடுத்திருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com