2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு

Share

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 255 ரன்​களும், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்​களும் எடுத்​தன.

34 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 24 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 78 ரன்​கள் எடுத்​தது. அபிமன்யு ஈஸ்​வரன் 0, தேவ்​தத் படிக்​கல் 24, சாய் சுதர்​சன் 23 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். கே.எல்​.​ராகுல் 26 ரன் களு​ட​னும், குல்​தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்​காமலும் இருந்​தனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com