முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா, தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஈடன் கார்டனில் இன்று பயிற்சி

Share

கொல்கத்தா: இந்தி​யா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 டெஸ்ட் போட்​டி, 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடர் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் கலந்​து​கொள்​வதற்​காக தென் ஆப்​பிரிக்க வீரர்​கள் நேற்று இந்​தியா வந்து சேர்ந்​தனர். பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஒரு​நாள் போட்​டித் தொடரை முடித்​துக் கொண்டு தென் ஆப்​பிரிக்க அணி வீரர்​கள் ஞாயிற்​றுக்​கிழமை இரு பிரி​வாக கொல்​கத்தா வந்து சேர்ந்​தனர்.

இங்​குள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில்​தான் இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்​கு​கிறது. தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​யில் இடம் பெற்று இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடிய தெம்பா பவுமா நேற்று காலை பெங்​களூரு​வில் இருந்து புறப்​பட்டு கொல்​கத்தா வந்து தங்​கி​யுள்ள தென் ஆப்​பிரிக்க அணி​யுடன் இணைந்​தார். அவருடன் ஜுபைர் ஹம்சா உள்​ளிட்ட சில வீரர்​களும், உதவி பயிற்​சி​யாளர்​களும் வந்​திருந்​தனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com