முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

Share

கழுத்​தில் ஏற்​பட்ட சுளுக்கு காரண​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் களமிறங்​க​வில்​லை. இதனால் தொடக்க ஆட்​டக்​கார​ராக யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஆகியோர் களம்​பு​குந்​தனர். முதல் ஓவரிலேயே இந்​திய அணிக்கு அதிர்ச்சி காத்​திருந்​தது. ரன் கணக்கை தொடங்​காமலேயே ஜெய்​ஸ்​வால், மார்கோ யான்​சன் பந்​தில் வீழ்ந்​தார். 3-வது ஓவரில் கே.எல்​.​ராகுலும், மார்கோ யான்​சன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்​டன் சுந்​தரும், துருவ் ஜூரெலும் நிதான​மாக விளை​யாடத் தொடங்​கினர். ஆனால் இந்த ஜோடியை ஹார்​மர் பிரித்​தார். துருவ் ஜூரெல் 34 பந்​துகளில் 13 ரன்​கள் சேர்த்​திருந்த நிலை​யில் வீழ்ந்​தார். இதைத் தொடர்ந்து விளை​யாட வந்த ரிஷப் பந்த், அதிரடி​யாக விளை​யாட முயன்று ஹார்​மர் பந்​தில் அவரிடமே பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அவர் 2 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com