சிப்பிப்பாறை அரசுப்பள்ளி பயிலும் 10-ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரியின் தொல்காப்பியம் முற்றோதல் (ஒப்புவித்தல்) நிகழ்ச்சி, சிவகாசி தனியார் கல்லூரி அரங்கில்நடைபெற்றது.
முதுகலைத் தமிழ்துறை, தமிழாய்வு மையம், தொல்காப்பிய மன்றம், கரிசல் இலக்கிய கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஜெயசீலன் கலந்து கொண்டார்.

சாத்தூர், வெம்பக்கோட்டை அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரி (15), தொல்காப்பிய இலக்கியத்தில் சொல்லதிகாரத்தில் உள்ள 456 நூற்பாக்கள், எழுத்ததிகாரத்தில் உள்ள 483 நூற்பாக்கள், பொருளதிகாரத்தில் உள்ள 656 நூற்பாக்கள் என மொத்தம் 1602 நூற்பாக்குகளை சுமார் இரண்டரை மணி நேரத்திற்குள் முற்றோதல் ஒப்புவித்து சாதனை படைத்தார்.