ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.
அதன்படி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது.
சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியது குறித்தும், ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை விடுவித்தது குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் காசி விஸ்வநாதன் , “சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது.
ஜட்டுவை (ஜடேஜா) சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிப்பது ஒரு கடினமான முடிவுதான். சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அவரும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
ஆனால் அணிக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. பரஸ்பர உடன்பாடு அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.