அதற்குப் பதிலளித்த பிரவீன், “எனக்கும் அந்தக் கேள்விதான் மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு. பிக்பாஸ், ‘திறமையும் டாஸ்க்கும் இந்த வீட்டின் ஒரு அங்கம்தான். அதைவிடவும் உங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக முன்வைக்க வேண்டியது முக்கியம்’ என்பார்.
ஆனால், என்ன பண்ணாதான் பிக்பாஸில் வீட்டில் இருக்க முடியும் என்பது தெரியவில்லை. சண்டை, சர்ச்சை, திறமை என எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்க வேண்டும். பாரு, விக்கல்ஸ் விக்ரம், சுபிக்ஷா என இந்த மூன்று பேரின் கலவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பிக்பாஸில் நிறைய குரூப்பிஸம் இருக்கும். நானும் ஒரு குரூப்பில் சிக்கிக் கொண்டேன். ஆனால், சீக்கிரமே அதை உணர்ந்து தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டேன்.
நான் வெளியேறியதற்குக் காரணம் யாருமில்லை. என்னுடைய தன்னம்பிக்கை குறைவாக இருந்ததுதான் காரணம்” என்று பேசியிருக்கிறார்.
அடல்ட் டாபிக் குறித்து கேட்டதற்கு, “எங்க முன்னாடியே அது நடந்திருக்கு. அதெல்லாம் நேர்ல பார்க்கும்போது குமட்டிட்டு வரும். நாங்களே கூப்டு இதெல்லாம் பண்ணாதீங்கனு சொல்லிருக்கோம். சொன்ன பிறகு எங்க முன்னாடி அப்படி நடந்தது இல்ல. ஆனா அதெல்லாம் சிலர் கண்டெண்ட்டுக்காகத்தான் பண்ணாங்க” என்றவர் இன்னும் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.
வீடியோவைக் காண:
Prankல தான் எல்லாருடைய உண்மை முகம் தெரிஞ்சது..! – Biggboss Praveen Raj Dev Shares | Serial | Cinema