போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது? | Doctor Vikatan: How to identify fake paneer?

Share

பார்ப்பதற்கோ, தன்மையிலோ அசல் பனீரை போலவே காட்சியளிப்பதால், பலருக்கும் அது அசலா, போலியா என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு, பிரிசர்வேட்டிவ் மற்றும் தரமற்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் போலி பனீரானது, இதயநோய்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஏற்படுத்தக் காரணமாகின்றன. கல்லீரலையும் பாதித்து, செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

அப்படியானால் இத்தகைய போலி பனீரை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வி எழலாம். முதல் விஷயம், பனீரின் விலை. அசல் பனீர், 200 கிராம் 80 முதல் 100 ரூபாய் வரை இருக்கும். அதைவிட அடிமட்ட விலைக்கு பனீர் கிடைக்கிறது என்றால் அது அசல்தானா என்று செக் செய்ய வேண்டும்.

அசல் பனீர், உதிர்த்தால் உதிரும்படியும் மென்மையாகவும் இருக்கும். போலி பனீர் என்றால், ரப்பர் தன்மையுடன் கடினமாக இருக்கும். சிறிதளவு பனீரில் சில துளிகள் அயோடின் திரவத்தை விட்டால், போலி பனீராக இருந்தால், அது நீலநிறமாக மாறும். காரணம், அதிலுள்ள மாவுச்சத்து. அசல் பனீர் என்றால் நிறம் மாறாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com