ஐ.பி.எல்லில் பிளேயர் ட்ரேடிங் முறை என்பது ஒரு சீசனின் ஏலத்துக்கு முன்பாகவே ஒரு அணி தங்களுக்கு வேண்டிய வீரரைச் சம்பந்தப்பட்ட அணியைத் தொடர்புகொண்டு புரிந்துணர்வு அடிப்படையில் வாங்கிக் கொள்வதாகும்.
இது மூன்று வழிகளில் நடைபெறும், ஒன்று தங்களுக்கு வேண்டிய வீரருக்கு ஈடாகத் தங்கள் அணியிலிருந்து ஒரு வீரரைக் கொடுப்பது.
மற்றொன்று, அந்த வீரருக்கு ஈடான முழு தொகையை அந்த வீரரின் கடந்த ஏல மதிப்பு தொகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அணியிடம் கொடுப்பது.
மூன்றாவது வீரரைக் கொடுத்து, மாற்று வீரருக்கு ஈடான ஏல மதிப்பு அந்த வீரருக்கு இல்லாத பட்சத்தில் அதைச் சமன்படுத்த கூடுதல் பணத்தையும் கொடுப்பது.

உதாரணமாகக் கடந்த சீசன் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை அணி நிர்வாகம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரூ. 15 கோடி கொடுத்து வாங்கியது.
அதேபோல், கடந்த சீசனுக்கு முன்பாக லக்னோ அணியும், ராஜஸ்தான் அணியும் ஆவேஷ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோரைத் தங்களுக்குள் மாற்றிக்கொண்டது.
இதில், லக்னோ அணி இந்த ட்ரேடிங்கை சமநிலைப்படுத்த ராஜஸ்தானுக்கு கூடுதலாக ரூ. 2.25 கோடி வழங்கியது.