ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தெற்கு காக்கூரை சேர்ந்தவர் ஜோதி மலர்.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பி.டெக் முடித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் புனேயில் அமைதி, சுற்றுச்சூழல், சுற்றுலா, கலாசாரத்தை வலியுறுத்தி நடந்த தேசிய மிஸ் ஹெரிடேஜ் அழகி போட்டியில் கலந்துகொண்டு “மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025′ எனும் பட்டத்தை வென்றிருந்தார்.

பல்வேறு அழகிப்போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற இவர் தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல்-2025’ என்ற ஹெரிடேஜ் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு ‘கலாசார தூதர்’ பட்டத்தை பெற்று இருக்கிறார்.
விவசாய குடும்பத்தில் பிறந்து வெளிநாடுகளுக்கு சென்று பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி மலருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.