சபரிமலை:திருமணத்திற்காக எடுக்கப்பட்ட ஐயப்பன் கோவில் தங்கம் – சபரிமலை மோசடி புகாரின் முழு பின்னணி

Share

சபரிமலை, இந்தியா, இந்து கோயில், தங்க திருட்டு, நீதிமன்றம், கேரளா

பட மூலாதாரம், Vivek Nair

படக்குறிப்பு, சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு (இந்தப் புகைப்படத்தில் உள்ள) அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தென் இந்தியாவின் புகழ்பெற்ற இந்து கோவிலான கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. காரணம், அந்தக் கோவிலின் சில சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல கோவில்களில், பெரும்பாலும் பக்தர்களின் நன்கொடை மூலம், சிலைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள் பொருத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் சபரிமலை கோவிலில் இந்த திருட்டு நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தங்கம் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்துள்ளது. போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்னாள் உதவி பூசாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை கண்காணித்து வரும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர் விசாரணைகளை நடத்தி வருகிறது. அடுத்த அமர்வு புதன்கிழமை நடைபெற உள்ளது.

இந்த மலைக்கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பும் செய்திகளில் இடம்பெற்றது. மாதவிடாய் வயதிலுள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்ல தடை உள்ளது. இந்த பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எதிர்ப்புகளுக்குப் பிறகு, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் ஒப்புக்கொண்டு, அதனை நிறுத்தி வைத்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com