நியூயார்க் மேயர் தேர்தலில் சொந்தக் கட்சிக்கே பாதகமான ட்ரம்ப்; படுதோல்வி கண்ட குடியரசுக் கட்சி | Trump is a disadvantage to his own party in the NY mayoral election; Republican Party suffers a crushing defeat

Share

அமெரிக்காவில் அதிபர் தேர்தலாக இருந்தாலும், மேயர் தேர்தலாக இருந்தாலும் அது ஜனநாயகக் கட்சிக்கும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும்தான்.

அதனால், யாரை வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதற்கே முதலில் இந்த இரு கட்சிகளுக்குள்ளும் தேர்தல் நடக்கும். அப்படி இந்த நியூயார்க் மேயர் தேர்தலுக்கும் இந்த இரண்டு கட்சிகளுக்குள் தேர்தல் நடந்தது.

ஆளும் குடியரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கர்ட்டிஸ் ஸ்லிவா (Curtis Sliwa) என்பவர் வெற்றிபெற்று வேட்பாளர் ஆனார்.

கர்ட்டிஸ் ஸ்லிவா (Curtis Sliwa) - குடியரசுக் கட்சி வேட்பாளர்

கர்ட்டிஸ் ஸ்லிவா (Curtis Sliwa) – குடியரசுக் கட்சி வேட்பாளர்

மறுபக்கம், ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானிக்கும், அதே கட்சியில் பெரும் செல்வாக்குமிக்க முன்னாள் நியூயார்க் மாகாண கவர்னர், முன்னாள் அட்டர்னி ஜெனரல், மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பல முகங்களைக் கொண்ட 67 வயது ஆண்ட்ரூ குவோமோவுக்கும் (Andrew Cuomo) இடையே போட்டி நிலவியது.

இறுதியில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றிபெற்று ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆனார்.

ஆனால், இதை எதிர்பார்க்காத ஆண்ட்ரூ குவோமோ, தனது கட்சி இந்தத் தேர்தலில் தோற்று குடியரசுக் கட்சி வேட்பாளர்கூட மேயர் ஆகட்டும், எக்காரணம் கொண்டும் பிழைக்க வந்தவன் ஆளக்கூடாது அதிலும் இஸ்லாமியர் கூடாது என ஜனநாயகக் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் வண்ணம் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com