பெண்கள் உலகக் கோப்பை: இந்தியா வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்திய முன்னாள் வீராங்கனை திருஷ் காமினி பரிந்துரைக்கும் மாற்றங்கள்!

Share

CRICKET - WOMEN'S WORLD CUP

பட மூலாதாரம், Getty Images

பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதலிரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த இரு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.

இரண்டு போட்டிகளிலுமே நல்ல நிலையில் இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறது ஹர்மன் தலைமையிலான அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா நன்கு போராடியது என்று சிலர் திருப்திபட்டுக்கொண்டாலும், வெற்றி பெறவேண்டிய இரு போட்டிகளை அடுத்தடுத்து கோட்டை விட்டு இருக்கிறார்கள் என்ற விமர்சனமும் வலுக்கவே செய்கிறது.

இந்நிலையில், இந்த இரண்டு தோல்விகளுக்கும் முக்கிய காரணங்கள் என்னென்ன, அடுத்து வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்தியா என்ன செய்யவேண்டும் என்பவை பற்றி இந்திய முன்னாள் வீராங்கனையான திருஷ் காமினி நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.

“இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான இந்த உலகக் கோப்பைத் தொடரில் இன்னும் ஒரு முழுமையான அணியாக இந்தியா செயல்படவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒருசில வீராங்கனைகள் நன்றாக செயல்படுகிறார்கள். மற்றவர்கள் தடுமாறுகிறார்கள். அது இந்த 4 போட்டிகளிலுமே தொடர்ந்திருக்கிறது. மேலும், பிளேயிங் லெவனில் ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இல்லாதது, பேட்டிங் ஆர்டரை மாற்றாமல் அப்படியே களமிறக்குவது போன்ற விஷயங்கள் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்னையாக அமைந்திருக்கின்றன” என இந்தியாவின் தடுமாற்றத்துக்கு இரண்டு முக்கியக் காரணங்களை சுட்டிக்காட்டுகிறார் திருஷ் காமினி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான திருஷ் காமினி இந்தியாவுக்காக 44 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1000 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். இவர் தற்போது வர்ணனையாளராகவும் இருந்துவருகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com