விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார்.
சிவகாசி ரிசர்வ்லைன் ராஜா காலனியை சேர்ந்தவர் கனகராஜ்.
இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மெயின் ரோட்டில், பூவநாதபுரம் விலக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் முனியசாமியை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்தது.
அத்துடன் அவரது வீட்டுச் சாவியைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கும் சென்றனர். அங்கிருந்த பீரோவில் பணம், நகை மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.