ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் Hi-Fi; இணையத்தில் வைரலாகும் வீடியோ | India, Pakistan players play Hi-Fi in hockey match; Video goes viral on internet

Share

அதன் நீட்சியாக, நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் லீக் சுற்றில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.

இவ்வாறு, விளையாட்டிலும் இருநாட்டுக்கிடையிலான அரசியல் புகுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஹாக்கி போட்டியொன்றில் இருநாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் High-Five செய்து கொண்ட செயல் வைரலாகி வருகிறது.

மலேசியாவில் நடைபெற்றுவரும் 21 வயத்துக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி தொடரில், ஜோகூர் பாருவில் (Johor Bahru) இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

போட்டி ஆரம்பிக்கும்போது இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் Hi-Fi செய்து கொண்டனர்.

பின்னர், இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா 3 கோல் அடிக்கவே போட்டி சமனில் முடிந்தது.

அதைத்தொடர்ந்து, இரு அணி வீரர்களும் களத்தில் Hi-Fi கொடுத்துக் கொண்டனர்.

இருநாட்டு வீரர்களின் இந்த முதிர்ச்சியான செயல், வேண்டுமென்றே இருநாடுகளுக்கிடையே சிலர் பரப்பும் வெறுப்பு அரசியலை வென்றுவிட்டதாக பலரும் நெகிழ்கின்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com