ஊரெங்கும் இருமலும் சளியுமாக இருக்கிறது. பிரச்னை ஆரம்பிக்கையிலேயே இந்த “தங்க கஷாயத்தைக்’ கொடுத்தால், உடனே இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் சித்த மருத்துவர் அமுதா தாமோதரன்.
இந்தக் கஷாயத்தின் செய்முறையையும், பலன்களையும் இங்கே விவரிக்கிறார் அவர்.

தேவையானவை:
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பனை சர்க்கரை (Palm sugar) – சுவைக்கு ஏற்ப, பால் – 1 டம்ளர், திரிகடுகப் பொடி – 10 மி.கி (சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவில் கலந்ததுதான் திரிகடுகப் பொடி.)
செய்முறை:
பாலை காய்ச்சி, மஞ்சள் தூள், பனை சர்க்கரை, திரிகடுகப் பொடியைக் கலந்து, தினமும் அருந்தலாம்.