தஷ்வந்த் விடுதலை குறித்து சிறுமியின் தந்தை கூறுவது என்ன?

Share

தஷ்வந்த் விடுதலை: சிறுமியின் தந்தை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, தஷ்வந்த்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

“இந்த வழக்குக்காக, என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டி, நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராடினேன். இதற்காக எங்களின் மீத வாழ்க்கையையும் இழந்துவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் தஷ்வந்தை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடுவது?” என்கிறார் சென்னையில் 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தை.

இந்த வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

‘தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஊகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க முடியாது’ எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com