ஆசியக் கோப்பை 2025: இந்தியா vs ஓமன் – 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி|Asia Cup 2025 India Vs Oman match update

Share

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

நேற்று அபுதாபியில் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் நடந்தது. அதில் இந்தியாவும், ஓமனும் மோதிக்கொண்டன.

“டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 188 ரன்களைக் குவித்தது.

நேற்று இந்திய அணியில் முக்கியமாக ரன்களைக் குவித்தவர்கள் அபிஷேக் சர்மா (38 ரன்கள்), சஞ்சு சாம்சன் (56 ரன்கள்), அக்சர் பட்டேல் (26 ரன்கள்), திலக் வர்மா (29 ரன்கள்) ஆகியோர் ஆவார்கள்.

ஆசிய கோப்பை: இந்தியா Vs ஓமன்

ஆசிய கோப்பை: இந்தியா Vs ஓமன்

189 ரன் டார்க்கெட்டில் விளையாடிய ஓமன் அணியின் தொடக்க ஜோடி இந்திய அணிக்கு கடுமையான டஃப் கொடுத்தது.

ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 167 ரன்களைச் சேர்த்தது.

இதனால், இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டின் குட்டி அணியாக ஓமன் இருந்தாலும், நேற்று இந்திய அணிக்கு டஃப் கொடுத்தே தோல்வியைத் தழுவியது.

எது எப்படியோ, வாழ்த்துகள் இந்திய அணி!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com