பஹல்காம் ‘பயங்கரவாதிகள்’ கொல்லப்பட்டதாக கூறிய அமித் ஷா – எதிர்கட்சிகள் விடாமல் எழுப்பிய கேள்வி என்ன?

Share

ஆபரேஷன் மகாதேவ்

பட மூலாதாரம், SANSAD TV

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூன்று பேர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் நாளாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமித் ஷா இதனை தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பஹல்காம் தாக்குதல் ஏன், எப்படி நடந்தது என்று அரசு பதில் சொல்ல வேண்டும் என்று கோரினார்கள்.

“பஹல்காம் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்” – அமித் ஷா

ஆபரேஷன் மகாதேவ்

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அவையில் பேசிய போது, “பைசரன் பள்ளத்தாக்கில் (பஹல்காம்) நமது மக்களை கொன்ற மூன்று யங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்த அவையில் இருப்பவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com