குழந்தைகளுக்குத் திட உணவுகளை அறிமுகப்படுத்தும்போது முதலில் எந்த உணவையும் தனியேதான் கொடுத்துப் பழக்க வேண்டும். பிறகுதான் அதை வேறு உணவுகளுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஓட்ஸுடன் பழங்கள் சேர்த்தும் கொடுக்கலாம். உதாரணத்துக்கு, ஓட்ஸுடன் மசித்த வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்துக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஓட்ஸ் கொடுக்கும்போது எப்போதும் பிளெயின் ஓட்ஸாக இருக்கும்படி பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மசாலா ஓட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
ஓட்ஸை முதலில் வெறும் கடாயில் லேசாக வறுத்து, பிறகு பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொடுக்கலாம்.
கேரட் கொடுக்க நினைத்தால், அதை வேகவைத்து, ஓட்ஸுடன் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கலாம். பழங்களையும் இதே முறையில் சேர்த்து, நீர்த்த கஞ்சி பதத்தில்தான் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் ஓரளவு வளர்ந்து, எல்லா திட உணவுகளுக்கும் பழக்கமான பிறகு ஓட்ஸை பருப்பு சேர்த்து கிச்சடி போலக்கூட செய்து கொடுக்கலாம். காய்கறிகள் சேர்த்து சாதம் செய்து கொடுப்பதுபோலவே ஓட்ஸில் செய்து கொடுக்கலாம்.
ஓட்ஸில் தோசை, சப்பாத்தி போன்றவற்றைக்கூட செய்து கொடுக்கலாம். 9 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு ஓட்ஸை பொடித்துச் சமைக்க வேண்டிய தேவையில்லை. ஓட்ஸை அப்படியே வேகவைத்துச் செய்து கொடுத்தாலே போதும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.