Doctor Vikatan: நான் 50 வயதுப் பெண். ஆக்டிவ்வாக இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கு திடீரென மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டது. ஒருவித அசௌகர்யமான உணர்வு ஏற்படவே, ஹார்ட் அட்டாக் அறிகுறி என நினைத்து மருத்துவரிடம் போனேன். இசிஜி எடுத்துப் பார்த்து பிரச்னை இல்லை என்றார்.
பிறகு மூச்சு சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம் என நுரையீரல் மருத்துவரையும் பார்த்தேன். அவரும் பிரச்னை இல்லை என்றார். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகவும் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது…?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
அறிகுறிகளை உணர்ந்ததும் உடனடியாக மருத்துவரை அணுகிய செயல் பாராட்டத்தக்கது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு “லாங் கோவிட் சிண்ட்ரோம்’ (long covid syndrome) என்ற பாதிப்பு வருவது பற்றி கொரோனா காலத்திலேயே நிறைய பேசியிருக்கிறோம்.