Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?

Share

பொதுவாகவே, முட்டையில் மஞ்சள் கருவைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். மஞ்சள்கருவில் 5 கிராம் அளவு கொழுப்புச்சத்து உள்ளது. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பாதிப்புக்குள்ளானவர்கள், இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், சாப்பிடும் கொழுப்பை எரிக்க இயலாதவர்கள் போன்றோருக்கு மஞ்சள் கருவால் கொழுப்பு அதிகமாகவும், ஏற்கெனவே உள்ள உடல்நல பாதிப்புகள் மேலும் தீவிரமடையவும் வாய்ப்புகள் அதிகம். 

ஒருவரது எடைக்கேற்ப அவரது அன்றாட புரதச்சத்து தேவை நிர்ணயிக்கப்படும். உதாரணத்துக்கு, 60 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு 60 கிராம் அளவு புரதச்சத்து தேவை. அந்த 60 கிராம் புரதத்துக்கு மட்டுமன்றி, அதையும் தாண்டி 80 கிராம் அளவுக்குப் புரதச்சத்தை வெறும் முட்டையின் மூலம் மட்டுமே ஒருவர் உடலில் சேர்த்துக்கொள்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்நிலையில், புரதச்சத்தின் அளவு அதிகரித்து அது கிட்னியை பாதிக்கும் ஆபத்து உண்டு. இன்னொரு தரப்பினர், முட்டைகளையும் அதிக எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டு, வேறு உணவுகளின் மூலமும் புரதச்சத்தைச் சேர்த்துக்கொள்வார்கள். அதுவும் தவறானது. எடைக்கேற்ற புரதம் உடலில் சேரும்படி பார்த்துக்கொண்டால் போதும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது முட்டைக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com