கால் இறுதி சுற்றில் நுழைந்தது பிஎஸ்ஜி! | fifa club world cup psg enters quarter finals

Share

அட்லான்டா: கிளப்களுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அட்லான்டாவில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் லயோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின.

இதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தரப்பில் ஜோவோ நெவ்ஸ் இரு கோல்களும் (6 மற்றும் 39-வது நிமிடம்), டோமஸ் அவிலெஸ் (சுய கோல், 44-வது நிமிடம்), அக்ரஃப் ஹக்கிமி (45+3-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

லயோனல் மெஸ்ஸி இன்​டர் மியாமி கிளப்​புக்கு மாறு​வதற்கு முன்​னர் பிஎஸ்ஜி அணி​யில் இரண்டு சீசன்​கள் விளை​யாடி இருந்​தார். இதனால் அந்த அணிக்கு எதி​ரான ஆட்​டம் மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்​தது. இந்த போட்​டியை காண மைதானத்​தில் 65,574 ரசிகர்​கள் குவிந்​திருந்​தனர்.

மெஸ்​ஸிக்கு இரு முறை கோல் அடிப்​ப​தற்​கான வாய்ப்பு கிடைத்​தது. 63-வது நிமிடத்​தில் அவர், இலக்கை நோக்கி அடித்த பந்தை பிஎஸ்ஜி அணி​யின் கோல் கீப்​பர் கியான்​லூய்கி டோனாரும்மா எளி​தாக தடுத்​தார்.

தொடர்ந்து 70-வது நிமிடத்​தில் லயோனல் மெஸ்ஸி பந்தை தலை​யால் முட்டி கோல் அடிக்க முயன்​றார். ஆனால் கியான்​லூய்கி டோனாரும்மா அபார​மாக டைவ் அடித்​து கோல்​ விழ​வி​டா​மல்​ தடுத்​தார்​.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com