2023-ம் ஆண்டு உலகம் முழுவதும் 15.7 கோடி ஜீரோ டோஸ் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 8 நாடுகளிலேயே உள்ளனர்.
அவை, நைஜீரியா, இந்தியா, காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், இந்தோனேசியா மற்றும் பிரேசில்.
இந்தியாவில் மட்டும் 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசிக்கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இதனால் இந்த பட்டியலில் நைஜீரியாவுக்குப் பிறகு இரண்டாம் இடம் பிடிக்கிறது நம் நாடு.
கோவிட் 19 தாக்கம்
கொரோனா வைரஸ் பரவல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது. டிடிபி, தட்டம்மை (MCV1), மற்றும் போலியோ ஆகியவை தடுப்பூசிகள் செலுத்துவதில் வீழ்ச்சியை எதிர்கொண்டனர். இன்றுவரை கோவிட்டுக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப முடியாத நிலையே தொடர்கிறது. அதிக வருமானம் கொண்ட நாடுகளும் கூட இதில் தப்பவில்லை.
இப்போதிருந்து முழு அர்பணிப்புடன் செயல்பட்டால் மட்டுமே 2023-க்குள் டிடிபி3 (இறுதி டிடிபி தடுப்பூசி) 90% குழந்தைகளுக்கு செலுத்தபடுவதற்கான இலக்கை அடைய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அணுகல் குறைவான ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று சேவையாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் பல லட்சம் குழந்தைகளின் உயிர்கள் அபாயாத்தில் தள்ளப்படுமென்றும் எச்சரித்துள்ளனர்.