அடுத்து, ரஞ்சி ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியன் என்பவரை பார்டர் கவாஸ்கர் தொடருக்கு தேர்வுக்குழு தேர்வு செய்தது.
முதல் தர கிரிக்கெட்டில் 38 போட்டிகளில் 113 விக்கெட்டுகளும், இரண்டு சதம் உட்பட 1,914 ரன்களும் அடித்திருக்கிறார்.
இவரும் பார்டர் கவாஸ்கர் தொடர் முழுவதும் பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மற்றுமொரு முக்கியமான வீரர் அபிமன்யு ஈஸ்வரன். முதல் தர கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் 48.7 ஆவரேஜில் 27 சதங்களுடன் 7,841 ரன்கள் அடித்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்தில் விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக முதல் தர போட்டிகளில் ஆடியிருக்கும் கே.எல். ராகுலை விடவும் கூடுதல் ஆவரேஜில் அதிக ரன்கள் அடித்தவராக அபிமன்யு ஈஸ்வரன் இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கு இவரும் தேர்வானார்.

ஆனால், அந்தத் தொடரில் ஒரு போட்டியில்கூட களமிறக்கப்படாமல் 5 போட்டிகளிலும் பென்ச்சிலேயே அமரவைக்கப்பட்டார்.
இருப்பினும் ஆறுதலாக இங்கிலாந்துக்கெதிரான தொடரில் தேர்வாகியிருக்கிறார்.
ஆனால், முதல் டெஸ்டில் பென்ச்சில் அமரவைக்கப்பட்டு ஓப்பனிங்கில் ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டார்.
அப்போதே, ஐ.பி.எல்லில் ஆரஞ்சு கேப் வென்றிருந்தாலும், முதல் தர கிரிக்கெட்டில் சாய் சுதர்சனை விடவும் அதிக ஆவரேஜில் அதிக ரன்கள் குவித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனை ஏன் களமிறக்கவில்லை என எழும் நியாயமான கேள்விகளுக்கு கம்பீர் & கேப்டன் கில்லின் பதில் என்ன?