அவசரகால விபத்து சேவைகளில் குழந்தை நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகளும் உள்ளன. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தவிர, நிபுணர்கள் குழுவில் மென்மையான திசு தொடர்பான சிக்கலான சிகிச்சைகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்த ஓட்டம் பிரச்சினைகளுக்கான வாஸ்குலர் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது இளம் நோயாளிகளை நிர்வகிப்பதில் அனுபவம் வாய்ந்த குழந்தை மயக்க மருந்து நிபுணர்கள் என பல்துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.
தமிழ்நாட்டின் முன்னணி குழந்தை மருத்துவ சுகாதார நிறுவனம் என்ற நற்பெயரை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்த புதிய சிறப்பு சிகிச்சை மையம், தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாக, தனது முக்கியத்துவத்தை மேலும் மேலும் வளர்த்தெடுத்து வருகிறது.. மேலும் சவாலான காலங்களில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றிய உண்மையான புரிதலுடன் மருத்துவ நிபுணத்துவத்தை துல்லியமாக அளிப்பதால் அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
அப்போலோ மருத்துவமனை பற்றி:
1983-ல்டாக்டர்பிரதாப்சிரெட்டிசென்னையில்இந்தியாவிலேயேமுதல்முறையாகமிகப்பெரியகார்ப்பரேட்மருத்துவமனையைத்தொடங்கியதன்மூலம்ஒருமுன்னோடிமுயற்சியைமேற்கொண்டார். அப்போதுஇந்தியாவில்அப்போலோஒருமிகப்பெரியமருத்துவப்புரட்சியைஏற்படுத்தியது. இன்றுஆசியாவிலேயேமிகவும்நம்பகமானஒருங்கிணைந்தமருத்துவநலகுழுமமாகதிகழும்அதில், உலகம் முழுவதும் 10,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், சுமார் 6600 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 2182 மருத்துவ பரிசோதனை மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது.
ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.
கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.