26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த ஷெல் தாக்கதலால் பூஞ்ச் மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில், 12 வயது இரட்டையர்கள், ஒரே சமயத்தில் உயிரிழந்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று 5 நிமிட இடைவெளியில் பிறந்த இந்த இரட்டையர்கள் நடைமுறையில் பிரிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் மண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ரமீஷ், இவரது மனைவி உர்ஷா.
இந்த தம்பதிக்கு, 2014 ஏப்ரல் 25 அன்று 5 நிமிட இடைவெளியில் உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இந்த இரட்டையர்கள் பிறந்தனர். சமீபத்தில் நடந்த பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில், இந்த இரட்டையர்கள் சில நிமிட இடைவெளியில் கொல்லப்பட்டுள்ளனர்.