Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயர் சூட்டிய பெற்றோர்கள்!

Share

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.

Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசிவந்தது. இதையடுத்து கடந்த மே 10 ம் தேதி தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்’ அடையாளமாக உத்தரப்பிரதேசம் குஷிநகர் மருத்துவக் கல்லூரியில் மே 10, 11ம் தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ‘சிந்தூர்’ என்று பெயரிட்டுள்ளதாக அந்தக் கல்லூரியின் முதல்வர் ஆர்.கே. ஷாஹி தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com