ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது எப்படி? நேரலை

Share

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நள்ளிரவில் தாக்குதல்: பாகிஸ்தான் பதிலடி - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா அறிவித்துள்ளது.

“பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன” என இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்பட குறைந்தது 8 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 35 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com