சத்தியமூர்த்தி பவனில், வடக்கு நோக்கிய படையெடுப்பு இப்போது சீசன்போல. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை நீக்கச் சொல்லி, 15 மாவட்டத் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்துத் திரும்பிய நிலையில், கட்சியின் தேசியச் செயலாளர் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக, கோவாவுக்குப் படையெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள் அவரின் எதிர்ப்பாளர்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான், ‘மயூராவைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில் இந்த கோவா படையெடுப்பு, கதர்களிடம் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. என்னதான் நடக்கிறது சத்தியமூர்த்தி பவனில்..?
Junior Vikatan – 09 March 2025 – “கட்சியே அழிஞ்சுபோயிடும்..!”- கோவாவுக்குப் படையெடுத்த ஐவர்… சண்டை மைதானமாகும் சத்தியமூர்த்தி பவன்! | tn congress inter party issue
Share