டிரம்ப் – ஸெலன்ஸ்கி சந்திப்பு: பத்தே நிமிடங்களில் என்ன நடந்தது? முழு விவரம்

Share

டொனால்ட் டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு, அமெரிக்கா - யுக்ரேன், ரஷ்யா, புதின்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், டாம் பேட்மென், பெர்ண்ட் டெபுஸ்மன் ஜூனியர்
  • பதவி, பிபிசி

உடனடியாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் டொனால்ட் டிரம்புடன் நேர்மறையான சந்திப்பை நடத்திவிட்டு, யுக்ரேனின் கனிம வளங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து திரும்ப வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நினைத்தார்.

ஆனால், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் அறிவித்த பிறகு ஸெலன்ஸ்கி உலக ஊடகங்கள் முன்பு குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதைப் போல் உணர்ந்தார்.

டொனால்ட் டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு, அமெரிக்கா - யுக்ரேன், ரஷ்யா, புதின்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விளாதிமிர் புதினுடன் இணைந்து போர் நிறுத்தப் பணிகளுக்காக அதிகம் உழைக்க வேண்டும் என்று யுக்ரேன் அதிபருக்கு அவரின் சக்தி வாய்ந்த கூட்டாளிகள்(அமெரிக்க அதிபர், துணை அதிபர்) பரிந்துரை செய்தனர். ஆனால், இதனை ஸெலன்ஸ்கி ஏற்கவில்லை. அவரின் இந்த நடத்தையை ‘மரியாதையற்ற செயல்’ என்று இருவரும் ஸெலன்ஸ்கியை விமர்சனம் செய்தனர்.

திட்டமிடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com